திட்டமிட்ட தூத்துக்குடி படுகொலை

தூத்துக்குடியில் கமாண்டோ படையை சேர்ந்த ஒருவர் காவல்துறை ட்ரக்கின் மீது ஏறி நின்று சுட்டதும், அதை சில மீடியாக்கள் மீண்டும், மீண்டும் ஒளிபரப்புவதும் வெறும் திசைதிருப்பும் நாடகம்.

அது நமக்காக மட்டுமே படம்பிடிக்கப்பட்ட பிரத்யேக காட்சி. தரமான ஆஸ்கர் பரிசு பெரும் படப்பதிவு.

உண்மையான படுகொலை என்பது IB யின் துணையுடன், மக்களோடு மக்களாக கலந்த உளவுப்படையினர், போராட்டக்காரர்களை குறிப்பெடுத்து, அவர்களை ‘சப் மார்க்கிங்’ செய்து அவர்கள் அருகிலேயே நின்று, point blank ரேஞ்சில் வைத்து சுட்டுக் கொன்று இருக்கிறார்கள்.

போராட்டக்கார தலைமைகளின் வாய்க்குள் ரிவால்வரை திணித்து கொலை செய்ததெல்லாம் அவ்வகையே.

பத்திற்கும் மேற்பட்ட போராட்டக்கார தலைமைகளை கொலை செய்ய, குறைந்தது இருபத்தி ஐந்திற்கும் மேற்பட்ட உளவுப்படை டீம்கள் போராட்டக்காரர்களோடு கலந்து நின்று இருக்கும்.

அதை திசை திருப்பவும், உளவுப்படையினர் கொலை செய்வதை மக்கள் பார்வையில் இருந்து மறைக்கவுமே, தடியடி நடத்தி குழப்பம் ஏற்படுத்தி அந்த குழப்பத்தில் படுகொலை நிகழ்ந்திருக்கிறது.

அதனால்தான் திட்டமிட்டு அவர்களை ஆட்சியர் அலுவலகம் நோக்கி உள்ளே வரவைத்து இருக்கிறார்கள். மேலும், ஆட்சியர் அலுவலகத்தின் நிலைக்கதவின் மேல் இருக்கும் இரண்டு CCTVக்களும் குப்புற கவிழ்த்து வைக்கப்பட்டு இருப்பது அதற்கு சான்று.

இந்த கொலைகளை செய்ய முன்பே திட்டமிட்டு, மிக குறைவான காவலர்களோடு நின்று, உண்மையாக கூட்டத்தை கட்டுப் படுத்தவேண்டும் என்ற நோக்கமில்லாமல், கூட்டம் கட்டுக்கடங்காமல் போனதால் கலவரம் ஏற்பட்டு, துப்பாக்கி சூடு நிகழ்ந்துவிட்டது என்கிறார்கள்.

சில ஊடகங்கள் மட்டுமே அதை பதிவு செய்தது போலவும், எங்கோ அரை கிலோமீட்டர் தொலைவில் ட்ரக்கின் மீது ஏறி நின்று குறிபார்த்து பத்து போராட்டக்காரர்களை மிக சரியாக சுட்டதென்பதெல்லாம் வெறும் நாடகம்.

ஆக, இது போராட்டக்கார தலைமைகளை தேர்வு செய்து, உளவுப்படை செய்த பச்சை படுகொலை.