காத்திரு கண்களே

எங்கண் ஏகினள் எங்கண் ஏகினள்
கண்ணிலே காமத்துமீன் தவழ ,
நெஞ்சனைக் கனியோ
நீள் துயர் தருகினள்;

பன்னிரு நாளினும் பாவையைக் கண்டிலன் ,
அங்கமும் உருகிப் பங்கமும் ஆகினோம் யாம்
எங்கனம் போயினள் எவரும் அறிகிலர்;
காதற் நோயினால் கண்களும் வாடினோம்

நிலையற்ற நெஞ்சே நீடுதுயர் ஆகுமோ
வாடிப்பயனில் வாழ்க என் நன்னெஞ்சே
கூடிப்பயிர்ப்போம் கேளிக்கை கூத்தில்
காத்திரு கண்களே காலம் மலரட்டும்;

முதல் முத்தம்

நேரிழை நெற்றியிடை
செங்குருதி புனல்போல
சின்னதாய் ஒரு சிற்றோடை
வழியுதுபார் அன்பே
உன் நெற்றிப்பொட்டு வியர்வை !

வெள்ளித் திரைக்கு பின்னால் காதல்

உப்பு தென்றலில் காயும் தேகம் ,
உருகி வடியும் இதய மலர்கள் ,
மேனி சிலிர்க்க உரோம பூக்கள்,
உறவுகொள்ளத் துடிக்கும் சிலையாய் ,

கையும் விரலும் சரசமாட,
காதல் அலைகள் பாடல் பாட ,
உன் இதழ்கள் உரசும் சத்தம்,

திங்கள் பூசிய வண்ண மேனி,
காதல் உறவை வெளிச்சமாக்கும் ,
வெள்ளித்திரைக்கு பின்னே போலும்,
இரட்டைப் பூவாய் கலவி கொண்டோம் ,

இரவுக் காவலன் விழிக்கும் முன்னே ,
நம் காதல் சரசம் தொடரும் கண்ணே,
நிலவுக் காவலன் பன்னீர் தெளிக்க,
காதல் உறவை தொடர்ந்து நம் –
இன்ப உறவை களித்திருப்போம் .

 

பூக்கள் கூட காதலிக்கும்

ஒருநாள் வாழ்வேன்
என்று தெரிந்தும்
உனக்காக மலர்கிறேன்
உன்தலையில் ஒருநாளேனும்
வாழ்ந்துவிட வேண்டுமென்று!

English: (to a typical Tamil woman, the flowers say):

Though,my life is for a day,

A thumb rule of my life,

I still blossom from the stem,

To live on your plait for a day!