வெள்ளித் திரைக்கு பின்னால் காதல்

உப்பு தென்றலில் காயும் தேகம் ,
உருகி வடியும் இதய மலர்கள் ,
மேனி சிலிர்க்க உரோம பூக்கள்,
உறவுகொள்ளத் துடிக்கும் சிலையாய் ,

கையும் விரலும் சரசமாட,
காதல் அலைகள் பாடல் பாட ,
உன் இதழ்கள் உரசும் சத்தம்,

திங்கள் பூசிய வண்ண மேனி,
காதல் உறவை வெளிச்சமாக்கும் ,
வெள்ளித்திரைக்கு பின்னே போலும்,
இரட்டைப் பூவாய் கலவி கொண்டோம் ,

இரவுக் காவலன் விழிக்கும் முன்னே ,
நம் காதல் சரசம் தொடரும் கண்ணே,
நிலவுக் காவலன் பன்னீர் தெளிக்க,
காதல் உறவை தொடர்ந்து நம் –
இன்ப உறவை களித்திருப்போம் .