அறுத்தெறி முலைகளை/ Behead the Breasts

ஆறிலும் சாவு நூறிலும் சாவு
சென்று வா மகனே! வென்று வா மகனே !
என்று தானே வேலும் கையுமாய்
வீறு கொண்ட நடையோடு
போருக்கு அனுப்பினேன்.

புறமுதுகிட்டு ஓடி புழுதியில் விழுந்தனையோ!
புல்லருவி பெற்ற மகனே
என பெயர் அழைக்க வைத்தனையோ!

கோழைக்கு பால் கொடுத்த
கொடுங்க்கூற்று முலைகளே
மண்ணில் வீழ்வாய்
அறுத்தெறி முலைகளை
என அறுத்தெறிந்தாள் தமிழச்சி !

Translation Courtesy :  Anamika

Anamika is an amazing writer and a blogger..her blog is here

Oh my son, death is inevitable,
Even if it is at sixth year or hundredth,
So, with grit and strength, I sent you to the battlefield
To win for the motherland and come
With the majestic walk and the strong weapons
To fight the war with hope I send you
I sent you to the battlefield to win and come
But instead of boldness you showed
Your back to the enemy, trying to escape,
Falling on the ground with arrows at your back
Oh, you made me the weed of a brave farm giving birth to you,
Me being the proud Tamil woman, I am,
I chop you oh my shameful breasts,
That fed a coward, down to the ground.

காற்றில் எழுதிய சரித்திரம்

காலம் மாறலாம் , நம் கோலம் மாறலாம்
கண்ட கனா மாறலாம் , உலகம் கூட வேறு ஆகலாம்,
பேசிய பேச்சும் , காற்றில் கலந்த பேச்சலையும் ,
யுகங்கள் கடந்து அண்டம் முழுதும் வாழ்ந்தேயாகும்.

அலையும் நானும்

கரையை வந்து வந்து பார்த்துவிட்டு
வெறும் கையேடு போகும் அலைபோல,
நித்தம் நாம் களித்திருந்த இடம் வந்து,
கண்ணீரை நிரப்பிவிட்டு போகின்றேன்.

அன்பு தங்கைக்கு — to my beloved sister

As a request to write a poem to a sister – a blogger!!

படைக்கும் முன் பரமன் கேட்டான்
யார் முதலில் பிறக்க போகிறோம் என்று;

நான் முதலில் பிறந்து
உன்னை தூக்கி சுமக்க
வரம்கேட்டு அண்ணனாய் அவதரித்தேன்;

உன் பிஞ்சு கைகள் பிடித்து
நெஞ்சோடு அணைத்து கொஞ்சினேன் அன்று;
ஓடி விளையாடும் போது,
கைகோர்த்து கண்ணீர் சிந்தாமல்
என்னை தன்னுயிராய் காத்தாய்.
அந்த கைக்கு பரிசு
தங்கத்தால் வளையல்.

பிறவிகள் தாண்டியும் தொடரும் பாசம்
கல்யாணம் முடிந்து தாயாவாய் நீ
தாய் மாமன் என்று முடிசூட்டுவாய் எனக்கு;

என் அண்ணன் என்று ஊருக்கு சாற்றுவாய்
ஆறாத காயங்கள் எல்லாம் தாயாய் ஆற்றுவாய்;

தொப்புள் கொடி உறவு நம் பந்தம்
மருமகள் கொடுத்து தொடரட்டும் நம் சொந்தம்;

 

He[God] asked before the creation
Who was going to be born first;

I was born first
To carry you on my hands
I was born as a brother;

I hold your little hands
I wrapped up with the chest on the day;
The hands you wrapped my neck

To wipe my tears together
I gifted that hand
a Golden bangle

The affection that continues beyond births
You’re married and you’re crowned as mother
You crowned me as father-in-law of your baby

you trumpet to the world our bonding
You will heal my injuries like a mother;

The relationship of the umbilical cord is our bond
We will continue beyond the births to come;

காத்திரு கண்களே

எங்கண் ஏகினள் எங்கண் ஏகினள்
கண்ணிலே காமத்துமீன் தவழ ,
நெஞ்சனைக் கனியோ
நீள் துயர் தருகினள்;

பன்னிரு நாளினும் பாவையைக் கண்டிலன் ,
அங்கமும் உருகிப் பங்கமும் ஆகினோம் யாம்
எங்கனம் போயினள் எவரும் அறிகிலர்;
காதற் நோயினால் கண்களும் வாடினோம்

நிலையற்ற நெஞ்சே நீடுதுயர் ஆகுமோ
வாடிப்பயனில் வாழ்க என் நன்னெஞ்சே
கூடிப்பயிர்ப்போம் கேளிக்கை கூத்தில்
காத்திரு கண்களே காலம் மலரட்டும்;

முதல் முத்தம்

நேரிழை நெற்றியிடை
செங்குருதி புனல்போல
சின்னதாய் ஒரு சிற்றோடை
வழியுதுபார் அன்பே
உன் நெற்றிப்பொட்டு வியர்வை !

தூர தேசம்

( இது ஒரு நாட்டுப்புறக் கவிதையாக எழுதுகிறேன், பிழைப்புக்காக, சொந்தம் விட்டு, பந்தம் எல்லாம் விட்டு நெடுந்தூர தேசத்திற்கு போகிற மக்களின் புலம்பல், ஒரு கன்னிப்பெண்ணின் குமுறலாக.)
 

அண்ண(ன்) வச்ச தென்ன மரம்
தெக்க இருக்குது
அக்கா வச்ச வேப்ப மரம்
வடக்க  இருக்குது
 
தங்கச்சி பாப்பா வச்ச மல்லிகை
அடுக்கடுக்கா பூத்துருக்கு
தம்பி வச்ச கிளிக்கூண்டு
தனியா கெடக்கு

அப்பா கட்டின வீடு அனாதையா இருக்கு
அம்மா ஏத்தின அணையா வெளக்கு
அ(ணை)ணஞ்சு கெடக்கு
ஒரல்ல கட்டின மாடு ஒரஞ்சுபோய் கெடக்கு 

ஆசையா நான் வளத்த ஆட்டுக்குட்டி
“அம் ……மே”னு  கத்திக்கிட்டு கெடக்கு
ஓடி வெளயாண்ட எடமெல்லாம்
ஒடஞ்சுபோய் கெடக்கு

தற்கொலைக்கு ஏற்காத எங்க ஒடம்பு
உசிருக்கு பயந்து ஊரவிட்டே  போகுது
போற தேசம் தெரியல
உயிர் மிஞ்சினா பரவா(ல்)ல 

கல்வழிப் பயணமோ
முள்வழிப் பயணமோ
கரை சேர போவமோ
கடவுளுக்கே அடுக்கள 

தோணியில கோணியா
தண்ணி மேல கண்ணீரோட
பயணம் போறோம் 

மீனுக்கு நாங்க ஒணவா- இல்ல
மீன்தான் எங்களுக்கு ஒணவா
கெழக்கே போறோமோ
வடக்கே போறோமோ
எந்த தெசயினு
எனக்கே தெரியல

காலையில வார சூரியனே
சாணி தெளிக்க வர மாட்டேன்
சாயங்காலம் வர சந்திரனே
இனி நிலாச்சோறு தரமாட்டேன் 

ஆசையா நான் வளத்த மல்லிகையே
இனி யார் ஒனக்கு தண்ணி கொடுப்பா?
தெரியாத தேசத்துக்கு
புரியாம போறம்

ஒலகத்துக்கே மூத்த எனம்
பொழைக்க வழி இல்லாம
போறோமே
வெளிநாட்டுக்காரனுக்கு எறையா.. 

வந்தா பாப்போம் வயக்காடே
அழாத என்னோட செம்மறி ஆடே
பொழச்சா பாப்போம் பூமியில்
செத்தா பாப்போம் சொர்க்கத்தில்!!!

திட்டமிட்ட தூத்துக்குடி படுகொலை

தூத்துக்குடியில் கமாண்டோ படையை சேர்ந்த ஒருவர் காவல்துறை ட்ரக்கின் மீது ஏறி நின்று சுட்டதும், அதை சில மீடியாக்கள் மீண்டும், மீண்டும் ஒளிபரப்புவதும் வெறும் திசைதிருப்பும் நாடகம்.

அது நமக்காக மட்டுமே படம்பிடிக்கப்பட்ட பிரத்யேக காட்சி. தரமான ஆஸ்கர் பரிசு பெரும் படப்பதிவு.

உண்மையான படுகொலை என்பது IB யின் துணையுடன், மக்களோடு மக்களாக கலந்த உளவுப்படையினர், போராட்டக்காரர்களை குறிப்பெடுத்து, அவர்களை ‘சப் மார்க்கிங்’ செய்து அவர்கள் அருகிலேயே நின்று, point blank ரேஞ்சில் வைத்து சுட்டுக் கொன்று இருக்கிறார்கள்.

போராட்டக்கார தலைமைகளின் வாய்க்குள் ரிவால்வரை திணித்து கொலை செய்ததெல்லாம் அவ்வகையே.

பத்திற்கும் மேற்பட்ட போராட்டக்கார தலைமைகளை கொலை செய்ய, குறைந்தது இருபத்தி ஐந்திற்கும் மேற்பட்ட உளவுப்படை டீம்கள் போராட்டக்காரர்களோடு கலந்து நின்று இருக்கும்.

அதை திசை திருப்பவும், உளவுப்படையினர் கொலை செய்வதை மக்கள் பார்வையில் இருந்து மறைக்கவுமே, தடியடி நடத்தி குழப்பம் ஏற்படுத்தி அந்த குழப்பத்தில் படுகொலை நிகழ்ந்திருக்கிறது.

அதனால்தான் திட்டமிட்டு அவர்களை ஆட்சியர் அலுவலகம் நோக்கி உள்ளே வரவைத்து இருக்கிறார்கள். மேலும், ஆட்சியர் அலுவலகத்தின் நிலைக்கதவின் மேல் இருக்கும் இரண்டு CCTVக்களும் குப்புற கவிழ்த்து வைக்கப்பட்டு இருப்பது அதற்கு சான்று.

இந்த கொலைகளை செய்ய முன்பே திட்டமிட்டு, மிக குறைவான காவலர்களோடு நின்று, உண்மையாக கூட்டத்தை கட்டுப் படுத்தவேண்டும் என்ற நோக்கமில்லாமல், கூட்டம் கட்டுக்கடங்காமல் போனதால் கலவரம் ஏற்பட்டு, துப்பாக்கி சூடு நிகழ்ந்துவிட்டது என்கிறார்கள்.

சில ஊடகங்கள் மட்டுமே அதை பதிவு செய்தது போலவும், எங்கோ அரை கிலோமீட்டர் தொலைவில் ட்ரக்கின் மீது ஏறி நின்று குறிபார்த்து பத்து போராட்டக்காரர்களை மிக சரியாக சுட்டதென்பதெல்லாம் வெறும் நாடகம்.

ஆக, இது போராட்டக்கார தலைமைகளை தேர்வு செய்து, உளவுப்படை செய்த பச்சை படுகொலை.

என் பிறவி செய்த பாவமடி

பிறவி செய்த பாவமடி
பூமியில் பிறந்தும்-
நான் உன்னோடு வாழாமல்.

கண்கள் செய்த பாவமடி
உன்னைக் கண்டும் –
நீ என்னைக் காணாமல்.

இறைவன் செய்த பாவமடி
அழகாய்ப் படைத்தும் –
நான் உன்னைச் சேராமல்.

என்னுயிர் செய்த பாவமடி
உன்னைப் பிரிந்தும் –
இன்னும் என்னைவிட்டுப் பிரியாமல்.

மீதிநாட்கள் செய்த பாவமடி
இன்னும் வாழ்ந்து-
நான் உயிரோடு சாகாமல்.

ஆற்றாமல் ஆற்றுகிறேன்
உன்நினைவைச் சுமந்து –
தோழி உந்தன் பாசத்தாலே!
*************************************************

பூக்கள் கூட காதலிக்கும்

ஒருநாள் வாழ்வேன்
என்று தெரிந்தும்
உனக்காக மலர்கிறேன்
உன்தலையில் ஒருநாளேனும்
வாழ்ந்துவிட வேண்டுமென்று!

English: (to a typical Tamil woman, the flowers say):

Though,my life is for a day,

A thumb rule of my life,

I still blossom from the stem,

To live on your plait for a day!